தமிழக திட்டங்கள்.. பிரதமரின் ஆலோசகர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை, ரூ.1,815 கோடி சென்னை துறைமுகம்- மதுரவாயல் மேம்பால இணைப்புச் சாலை திட்டம், எண்ணூர்-மணலி சாலை மேம்பாடு ஆகிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், இந்தப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் ஜெயலலிதாவுடன் நாயர் விவாதித்தாகத் தெரிகிறது.
மேலும் ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலைய கட்டுவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பின்போது பிரதமர் அலுவலக இயக்குநர் பல்லவி ஜெயினும் உடனிருந்தார்.
எண்ணூர்-மணலி பகுதியில் போதிய அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் செய்யப்படவில்லை என்று ஜப்பானிய முதலீட்டாளர்கள் சமீபத்தில் மத்திய அரசிடம் குறைபட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை-பெங்களூர் இடையே ஆந்திரா வழியாக மூன்றாவது எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகியவை ஒப்புதல் தந்துவிட்டன. 258 கி.மீ. நீளமுள்ள இந்த சாலை மத்திய அரசின் உதவியோடு அமைக்கப்படவுள்ளது.
அதே போல சென்னை துறைமுகம்- மதுரவாயல் மேம்பால இணைப்புச் சாலை திட்டம் சென்னை குடிநீர் வாரியத்தின் சில தடைகள் காரணமாக முடங்கியுள்ளது.
திமுக-காங்கிரஸ் உறவு அவ்வளவு சீராக இல்லாத நிலையில் பிரதமரின் ஆலோசகர் முதல்வரை சந்தித்திருப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications