நிருபரை 'நாயே' என்று திட்டிய வழக்கு.. கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரை அணுகிய நிருபர்கள், தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டனர்.
இதனால் கோபமடைந்த விஜயகாந்த், ஜெயா டிவி நிருபர் பாலுவை கடுமையாக திட்டத் தொடங்கினார். நாயே என்றும் போய்யா என்றும், நீயா சம்பளம் தர்றே என்றும், போய் ஜெயலலிதாவைக் கேளு என்றும் கோபமாகப் பேசியவர், அடிப்பதற்கும் கையை ஓங்கி ஓங்கி வந்தார்.
மேலும் தேமுதிக எம்.எல்.ஏவான அனகை முருகேசன் என்பவர் பாலுவை தள்ளி விட்டுத் தாக்கவும் முயன்றார்.
இதையடுத்து பாலு விமான நிலைய போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் விஜயகாந்த் மீதும், முருகேசன் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். அவருக்கு முன்ஜாமீனும் கிடைத்தது.
இதையடுத்து தாம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று நேரில் ஆஜரான விஜயகாந்த் முன்ஜாமீனைப் பெற்றார்.
முருகேசன் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications