தேர்தல் களப்பணியாளர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய ஒபாமா

பாரக் ஒபாமா இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரக் குழு அவருக்கு ஆதரவாக பணியாற்றிவர்களுக்கு ஒபாமா உணர்ச்சி பொங்க நன்றி தெரிவிக்கும் யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அந்த வீடியோவில் ஒபாமா கூறியிருப்பதாவது,
நீங்கள் எனக்காக ஆற்றிய பணி என்னுடைய வேலை மிகவும் முக்கியம் என்பதை உணர்த்துகிறது. உங்கள் வேலையைப் பார்த்து பெருமைப்படுகிறேன். உங்கள் அனைவரையும் பார்த்து பெருமையாக உள்ளது என்று கூறியவுடன் ஒபாமா கண்ணில் இருந்து கண்ணீர் பொங்கி அவரது கன்னங்களில் வழிந்தது.
இந்த வீடியோ டுவிட்டர் மற்றும் இமெயில் மூலம் தேர்தல் களப் பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எப்பொழுதும் உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிப்படுத்தாதவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒபாமா தற்போது கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதும் பிரச்சாரத்தின் இறுதியில் ஒபாமா கண்ணீர் சிந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications