இஸ்லாத்தையும், நபிகளையும் இழிவுபடுத்தி படம் எடுத்தவருக்கு ஓராண்டு சிறை
லாஸ் ஏஞ்சல்ஸ்: இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி படம் எடுத்த மார்க் பஸ்ஸலி யூசெபுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி 'தி இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படத்தை எடுத்தவர் அமெரிக்கரான நகோலா பஸ்ஸலி நகோலா(எ) மார்க் பஸ்ஸலி யூசெப்
. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படத்தை கண்டித்து லிபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் உள்பட 4 அதிகாரிகள் பலியாகினர்.
இந்த சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்த யூசெப் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது யூசெப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் மீதான 8 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் வரை முறையான அனுமதியின்றி கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
யூசெப் ஏற்கனவே கடந்த 5 வாரமாக அமெரிக்க மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications