புருஷனுடன் சிரித்துப் பேசிய பெண் முகத்தில் கண்ணாடியால் குத்திய பெணணுக்கு 5 வருடம் சிறை
கிளவ்செஸ்டர்: இங்கிலாந்தில், தனது கணவருடன் சிரித்து சிரித்துப் பேசிய பெண்ணின் முகத்தில் கண்ணாடியால் தாக்கி காயப்படுத்திய பெண்ணுக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கிளவ்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் நதாஷா ஹவ். 31 வயதான இவரது கணவர், அமி ப்ளூக் என்ற பெண்ணுடன், ஒரு நைட் கிளப் பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நதாஷா, தனது கணவருடன், அமி சிரித்து சிரித்துப் பேசியபடி இருப்பதைப் பார்த்து கோபமடைந்தார். தனது கணவரை அமி வளைத்துப் போட்டு விட்டாரோ என்று பயந்து போனார்.
உடனே வேகமாக அமியை நெருங்கிய அவர் அங்கிருந்த கண்ணாடி கிளாஸை எடுத்து அமி முகத்தில் ஓங்கி அடித்தார். இதில் அமி அலறியபடி கீழே விழுந்தார். அப்படியும் நிறுத்தாத நதாஷா, அமியின் தலை முடியைப் பிடித்து இழுத்து சுவரில் மோதினார். இதில் அமியின் முகத்தி்ல பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. அவர் வலியால் அலறித் துடித்தார். இதைப் பார்த்து அருகில் இருந்தோர் வேகமாக ஓடி வந்து நதாஷாவைத் தடுத்துப் பிடித்தனர். அமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் நதாஷாவைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். கோர்ட்டில் நடந்த விசாரணைக்குப் பின்னர் நதாஷாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே 2001ம் ஆண்டு வேகமாக கார் ஓட்டியதாக நதாஷா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications