டெல்லியில் அன்னா ஹசாரே குழுவின் ஆலோசனைக் கூட்டம்- வி.கே.சிங் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil

அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அரசியலுக்குப் போவதாக சர்ச்சைகள் கிளம்பி அர்விந்த் கெஜ்ரிவால் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அன்னா ஹசாரே தமது புதிய குழு தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்க டெல்லியின் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் அன்னா ஹசாரே, கிரன் பேடி, சந்தோஷ் ஹெக்டே மற்றும் மேதா பட்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, நாங்கள் எங்கள் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறோம். எங்களது யுக்தி குறித்து விவாதிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications