தனக்கு தெரியாமல் மகனுக்கு கல்யாணம்.. மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை
போடி & விருத்தாசலம்: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவ சின்னத்துரையின் (50) மனைவி மனைவு பவுன்தாய் (45). இவர்களுக்கு செல்வக்குமார் (27) சவுந்திரவேல் ஆகிய மகன்களும், சுதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் செல்வக்குமார், சுதாவுக்கு திருமணம் ஆகி விட்டது.
சில காலமாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பவுன்தாய் தனது மகன் சவுந்திரவேலுடன் தனியாக வசித்து வந்தார்.
இந் நிலையில் சவுந்திரவேலுவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார் பவுன்தாய். இதை தனது கணவரிடம் அவர் தெரிவிக்கவில்லை. சவுந்திரவேலுக்கு நாளை (11ம் தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வீட்டில் நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது.
இதையறிந்து ஆத்திரமடைந்த தந்தை சின்னத்துரை நேராக சவுந்திரவேல் வீட்டிற்கு வந்து அங்கிருந்த பவுன்தாயை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தனது வீட்டுக்கு வந்த சின்னதுரை கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார்.
ரத்தம் பீறிட வலியால் கதறி துடித்து உயிருக்குப் போராடிய அவரை தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்:
இதே போல விருத்தாசலம் அருகே நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
விருத்தாசலம் அருகே உள்ள கண்ணன்குடியை சேர்ந்த கண்ணனின் (30) மனைவி முத்துச்செல்வி (27). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 6 வயது மகளும் உள்ளனர்.
நேற்று காலை கண்ணன் வேலைக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது முத்துச்செல்வி வீட்டில் பிணமாக கிடப்பதாகக் கூறி கதறி அழுதார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசாரிடம் கண்ணனே சிக்கினார். விசாரணையில், முத்துலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து அவரை கொலை செய்ததை கண்ணன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications