செக்ஸ் விவகாரம்: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் தலைவர் ராஜினாமா

சி.ஐ.ஏவின் தலைவரான டேவிட் பீட்ராயூஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைக்கு இயக்குநராக, ஈராக்கில் அமெரிக்க பாதுகாப்புப் படைக்கு தலைவராக பதவி வகித்தவர். கடந்த புதன்கிழமையன்றுதான் அவருக்கு 60-வது பிறந்தநாள். அதற்கு மறுநாள் அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். இதை ஏற்றுக் கொண்ட ஒபாமா நேற்று புதிய சி.ஐ.ஏ. தற்காலிக தலைவராக மொரால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ராஜினாமா ஏன்?
அமெரிக்காவின் மிக முக்கிய பிரமுகரான பிட்ராயூஸ் ராஜினாமா பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவரைப் பற்றிய புத்தகம் எழுதிய பெளலாவுடன் உறவு வைத்திருந்ததாகவும் இதனை அமெரிக்காவின் விசாரணை அமைப்பான ஃஎப்.பி.ஐ. கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தமது ராஜினாமா தொடர்பான அறிக்கையில், ஒரு நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டும், நல்ல கணவனாக இருந்தும் கொண்டும் இத்தகையதொரு கருத்தை தெரிவித்ததற்கு வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடிய நபராக இருந்த பிட்ராயூஸின் ராஜினாமா, அமெரிக்க உளவு வட்டாரத்தில் பேரலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் புகாரில் சிக்கிய பிட்ராயூஸ், ரகசியங்களை அம்பலப்படுத்திவிடுவோம் என்று சிலர் மிரட்டியதாலேயே ராஜினாமா செய்தார் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொல்வதற்கான திட்டம் வகுத்தவரும் பிட்ராயூஸ்தான். பயங்கரவாதிகள் அமெரிக்காவை குறி வைத்திருக்கும் நிலையில் பிட்ராயூஸின் பதவி விலகியிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
அமெரிக்காவின் அதிபராக ஒபாமா 2-வது முறையாக பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் அதி முக்கியத்துவமான சி.ஐ.ஏவின் தலைவர் சர்ச்சையில் சிக்கி ராஜினா செய்திருப்பது அவருக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாகவும் பின்னடைவாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications