கான்டிராக்ட் வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்தை அமுக்கிய திமுக மாஜி யூனியன் தலைவர் மீது வழக்கு
விருதுநகர்: கான்டிராக்ட் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக திமுக முன்னாள் யூனியன் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மல்லி ஆறுமுகம். திமுகவை சேர்ந்தவர். அவர் மீது மக்கள் நலப்பணியாளரான கோவிந்தராஜ் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மல்லி ஆறுமுகம் யூனியன் தலைவராக இருந்தபோது எனது தந்தைக்கு கான்டிராக்ட் வாங்கித் தருவதாகக் கூறினார். இதற்காக ரூ.1 லட்சம் தனக்கு தர வேண்டும் என்றார். அவரை நம்பி ரூ.1 லட்சம் கொடுத்தும் கான்டிராக்ட் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக அவரிடம் பலமுறை கேட்டும் சரியான பதில் இல்லை. தற்போது அவரது வீட்டுக்கு சென்று பணத்தை தருமாறு கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மல்லி ஆறுமுகம் மீது கொலை மிரட்டல் மற்றும் மோசடி வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications