தரைதட்டிய கப்பல் பொதுமக்களின் ஆராவாரத்துடன் நடுக் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது!

நிலம் புயல் காரணமாக கடந்த மாதம் 31-ந் தேதி பெசன்ட்நகரில் எண்ணெய் கப்பல் பிரதிபா காவிரி என்ற எண்ணெய் கப்பல் கரை ஒதுங்கி தரை தட்டியது. அன்று இரவு காற்று பலமாக வீசியதால் அந்த கப்பல் மெரினா கடற்பரப்புக்கு இழுத்து வரப்பட்டு தரைதட்டியது.
இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மால்வியா என்ற இழுவை கப்பல் கயிறு மூலம் எண்ணெய் கப்பலை இழுக்கும் பணியில் ஈடுபட்டது. மீட்பு கப்பலின் இழுவைப் பணியால் நேற்று முன்தினம் பிரதிபா காவேரி கப்பலின் முன்பகுதி சற்று அசைக்கப்பட்டது. இதனிடையே கப்பலில் பழுதான என்ஜின், நங்கூரம், சுக்கான் மற்றும் புரபெல்லர் ஆகியவற்றை நெதர்லாந்து, சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள பொறியாளர்கள் சரி செய்தனர்.
மால்வியா கப்பல் தன்னுடைய இழுவை பணியை வழக்கம் போல் நேற்று மீண்டும் தொடங்கியது. சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரத்னா என்ற இழுவை கப்பலும் நேற்று இணைந்து கொண்டது.மால்வியா கப்பல் கயிறு மூலம் பிரதீபா காவேரி கப்பலை இழுத்தது. வேகமாக இழுத்ததால் எண்ணெய் கப்பல் கொஞ்சம் கொஞ்மாக நகர்ந்து சென்றது. நேற்று மாலை 6.20 மணியளவில் கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.அப்போது கடற்கரையில் பார்வையிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் கைதட்டி பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்பூ கொளுத்தியும் உற்சாகத்துடன் அந்த கப்பலை வழியனுப்பி வைத்தனர். கப்பல் பொறியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய கப்பல் துறை மந்திரி ஜி.கே.வாசன் தனியாக ஒரு கப்பலில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணியிலிருந்து 6.30 மணிவரை அவர் பட்டினப்பாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாலையில் கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட போதும் ஜி.கே.வாசன் அங்கு இருந்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications