வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ்.. மழை நீரில் சேர் போட்டு உட்கார்ந்து மக்கள் உற்சாகம்

கடந்த 150 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெனிஸ் நகரில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஏற்கனவே மிதக்கும் நகரான வெனிஸ் நகரம், இதனால் மேலும் நீரால் சூழப்பட்டு மூழ்கும் நகராக மாரியுள்ளது.
மத்திய வெனிஸ் நகரின் 70 சதவீத பகுதிகளில் 59 இன்ச் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இருந்தாலும் இதையும் விடாமல் அனுபவிக்கிறார்கள். நீச்சல் உடை அணிந்து நீச்சலடித்தபடியும், சேர் போட்டு உட்கார்ந்தும், மது அருந்தியும் அனுபவிக்கிறார்களாம்.
வெனிஸ் நகரின் பிரபலமான செயின்ட் மார்க்ஸ் சதுக்கம் சுற்றுலாப் பயணிகளால் எப்போதும் நிரம்பி வழியும். ஆனால் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு தற்போது வெள்ளம் மட்டுமே கரைபுரண்டோடிக் கிடக்கிறது.
உலகெங்கும் உள்ள காதலர்கள் வெனிஸ் நகரைத் தேடி ஓடி வருவார்கள். காரணம் அந்த மிதக்கும் நகரின் அழகையும், தங்களது காதலையும் அனுபவிக்க.ஆனால் இப்போது மேலும் தண்ணீர் கூடி நகரமே மூழ்குவது போல உள்ளதால் காதலர்களுக்கும் கூட கூடுதல் உற்சாகமாகி தண்ணீரில் நீச்சலடித்தும், ஜோடியாக நடந்து சென்றும் ஆசை தீர தங்களது சுற்றுலாவை அனுபவித்து வருகின்றனர்.
இருப்பினும் தெருக்கள் தோறும் வெள்ளம் அபாயகரமான அளவில் ஓடுவதால் பல இடங்களில் மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்து வர்த்தகத்தை பாதித்துள்ளது.












Click it and Unblock the Notifications