பால் தாக்கரேவுக்கு ஆக்ஸிஜன் மூலம் செயற்கை சுவாசம்; உணவு உட்கொள்ளவில்லை!

86 வயதான பால் தாக்கரே சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டர்ந்து அவரது உடல்நிலை மோசமாகவே உள்ளது. உணவு எதையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், அவர் வென்டிலேட்டரில் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவரை மருத்துவமனையில் சந்தித்து உடல் நிலை விசாரித்தார் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்.
நான் வென்டிலேட்டரில் இல்லை-பால் தாக்கரே
நேற்று முன் தினம் பால் தாக்கரேவின் பெயரில் அவரது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் வெளியிட்ட அறிக்கையில்,
என் உடல் நிலை முற்றிலும் மோசமடையவில்லை; நான் வென்டிலேட்டரில் இல்லை. என் உடல் நிலை விஷயத்தில், நான் எதையும் மறைக்க விரும்பவில்லை.
கடந்த மாதம், தசரா பண்டிகையின் போது நடந்த பொதுக் கூட்டத்திலேயே, "என் உடல் நிலை சரியில்லை' என்பதை கட்சித் தொண்டர்களுக்கு தெளிவாக தெரிவித்து விட்டேன். தற்போது என் உடல் நிலையை சீராக்க டாக்டர்கள் போராடி வருகின்றனர். இருந்தாலும் செயற்கை சுவாசம் அளிக்கும் நிலைக்கு நான் செல்லவில்லை. என் ஆதரவாளர்கள் காட்டும் அன்பும், ஆதரவும், எனக்கு புதிய சுவாசத்தை அளித்துக் கொண்டிருக்கிறது.
என் மகன் உத்தவ் தாக்கரேயும் குடும்பத்தினரும் என்னை, 24 மணி நேரமும் நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். ராஜ் தாக்கரேயும் அடிக்கடி வந்து என்னை பார்த்துச் செல்கிறார்.
நான் வழக்கம் போல பத்திரிகைகள் படிக்கிறேன்; ஆனால், தொலைபேசியில் யாருடனும் பேசுவதில்லை. மகாராஷ்டிரா மாநில மக்களுக்கும், சிவசேனா கட்சித் தொண்டர்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications