தமிழக மின்தடை வரலாற்றிலேயே முதல் முறையாக... நேற்று முழுவதும் கரண்ட் கட் இல்லை!

நேற்று தீபாவளித் திருநாள். நாடே கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. தமிழகத்தில் வழக்கத்தை விட அதீத உற்சாகத்துடன் மக்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். எங்கு பார்த்தாலும் காதுகளைக் கிழிக்கும் பட்டாசுச் சத்தம்தான். இந்த முறை மழை இல்லாமல் போய் விட்டதால் மக்கள் பெரும் உற்சாகத்துடன் தெருக்களிலும், சாலைகளிலும், வீடுகளுக்கு முன்பும், வீட்டு மொட்டை மாடிகளிலும் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் இது மழைக்காலம் மட்டுமல்ல, மின்தடைக் காலமும் கூட. தினசரி பல மணி நேர மின்தடையில் சிக்கி மக்கள் உழன்று வருகின்றனர். சென்னையில் 2 மணி நேரம் மட்டுமே. இந்த நிலையில் நேற்று தீபாவளிப் பண்டிகை காரணமாக அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டிருந்தன.
இதனால் மிஞ்சிய மின்சாரம் வீடுகளுக்கு தரப்பட்து. அதாவது பல மணி நேர மின்தடையை நேற்று பார்க்க முடியவில்லை. பெரும்பாலான பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலான மின்தடைதான் அமலானது. சில பகுதிகளில் முழுமையாக மின் விநியோகம் இருந்தது. சென்னையில் நேற்று மின்தடையே சுத்தமாக இல்லை. இதேபோலத்தான் பல பகுதிகளிலும் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று போல என்றும் மின்தடையில்லாமல் நிம்மதியாக டிவி பார்க்க, சட்னி அரைக்க, மாவு அரைக்க, ஏசியில் தூங்க அரசு நிரந்தரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் நேற்று ஏக்கத்துடன் வேண்டிக் கொண்டனர்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications