அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் யார்?

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஹிலாரி கிளிண்டன். தற்போது ஒபாமா 2-வது முறையாக அதிபர் ஆகிவிட்டார் ஒபாமா. வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு சூசன் ரைஸ், ஜான் கெர்ரி மற்றும் டாம் டொனிலன் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக இருப்பவர் சூசன் ரைஸ். லிபியாவின் பென்காசியில் அமெரிக்க தூதர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ரைஸின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகின. ஆனால் ஒபாமாவோ நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் சூசன் ரைஸின் நடவடிக்கைகளைப் பாராட்டவே செய்தார். இதனிடையே தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான டாம் டொனிலனை வெளியுறவுத்துறை அமைச்சராகிவிட்டு அந்த இடத்துக்கு சூசன் ரைஸை ஒபாமா நியமிக்கலாம் என்றும் கூறபடுகிறது. மற்றொரு வாய்ப்பான ஜான் கெர்ரியின் பெயரும் அடிபடுகிறது.
சூசன் ரைஸ் அண்மையில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசக சிவசங்கர் மேனன் மற்றும் வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாய் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார். ஜான் கெர்ரியும் இந்தியாவுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருக்கிறார்.
மூவரில் ஒபாமாவின் கடைக்கண் பார்வை யாருக்கோ?












Click it and Unblock the Notifications