காங்கிரஸின் சச்சின் டெண்டுல்கர் ராகுல் காந்தி: சல்மான் குர்ஷித்

2014ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்கள் தளபதி யார், யாருடைய வழிகாட்டுதலின்படி செல்ல வேண்டும் என்பது தற்போது தெளிவாகிவிட்டது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சச்சின் டெண்டுல்கர். யார் வைரம், யார் செல்லாக்காசு என்பது நம் மக்களுக்கு நன்கு தெரியும். ராகுல் எப்பொழுதுமே காங்கிரஸின் முகமாக இருக்கிறார். பீகார் மற்று உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் ராகுலின் புகழ் குறையவில்லை. விளையாட்டு வீரர் ஒருவர் ஒரு இன்னி்ங்ஸில் வெற்றி பெற்று பிற இன்னிங்ஸில் தோற்கிறார். அது போன்று தான் அரசியலும் என்றார்.
காங்கிரஸ் கட்சியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராகுலுக்கு விரைவில் புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications