டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்ட உ.பி. மதுபான தொழிலதிபர்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுபானத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த பான்ட்டி சத்தாவும் அவரது தம்பி ஹர்தீப்பும் இருவரும் ஒருவரையொருவர் சராமரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் இருவருமே உயிரிழந்துவிட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் மதுபானத் தொழிலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் பான்ட்டி சத்தா. கடந்த மாயாவதி ஆட்சிக்காலத்தில் அவரது கை ஓங்கி இருந்தது. அதற்கு முன்னதாக 2005-ம் ஆண்டு முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆட்சியிலும் சத்தாவின் கையே ஓங்கி இருந்தது. ஆனால் தற்போதைய அகிலேஷ் யாதவ் ஆட்சிக்காலம் சத்தாவுக்க் அப்படியொரு சுபிட்சமான காலமாக இருக்கவிலை.
ரூ6 ஆயிரம் கோடி மதிப்பில் சத்தா வேவ் குரூப் நிறுவனங்களை வைத்திருக்கிறார். மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகள், ரியல் எஸ்டேட் பண்ணைகள் என ஒரு பெரும்சாம்ராஜ்யத்தையே கையில் வைத்திருந்தார் சத்தா. ன்னி தியோல் நடிப்பில் 2005-ம் ஆண்டு ஜோ போலே சோ நிகால் என்ற திரைப்படத்தையும் வேவ் நிறுவனம் தயாரித்துள்ளது. இவை அனைத்தையும் சத்தாவின் சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரன் ஆகியோர் நிர்வகித்து வந்தனர்.
இந்நிலையில் டெல்ல்யில் உள்ள பண்ணை வீட்டில் இன்று பிற்பகல் சத்தாவும் அவரது தம்பி ஹர்தீப்பும் ஒருவரை ஒருவர் சராமரியாக சுட்டுக் கொண்டனர். இருவருக்கும் இடையே சொத்து தகராறில்தான் இந்த மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இவர்களது பாதுகாவலர் படுகாயமடைந்திருக்கிறார்.
தலைநகர் டெல்லியில் பிரபல தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications