ஐ.மு. கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மமதா உறுதி

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது, பெட்ரோல் விலை உயர்வு உட்பட மத்திய அரசின் முடிவுகளை எதிர்த்து சில மாதங்களுக்குமுன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறியது. இதனால் மைனாரிட்டி அரசாக மாறியது மத்திய அரசு.
இதன்பின் டெல்லியில், மத்திய அரசுக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்திய மம்தா பானர்ஜி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என, அறிவித்தார். இந்நிலையில், கொல்காத்தாவில் தனது கட்சியின் எம்.பிக்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மமதா. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில மத்திய அரசுக்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவார்.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு, சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகத்தில் கட்டுப்பாடு என அடுத்தடுத்து மக்களுக்கு விரோதமான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. எனவே மத்திய அரசை தூக்கி எறியவும் பொதுத் தேர்தல் மூலமாக புதிய அரசை கொண்டு வரவும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
எதிர்கட்சியான பா.ஜ. க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேசுவதற்கு நாங்கள் தயார். ஆளும்.கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வும் எங்கள் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுகிறோம். இதேபோல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரும் எங்கள் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இடதுசாரி கட்சிகளும் எங்கள் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.
மமதாவின் அழைப்பினை ஏற்று எத்தனை கட்சிகள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்பது குளிர்காலத் கூட்டத்தொடரின் போது தெரியவரும். அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி அடையுமா? அல்லது 2014 ம் ஆண்டு வரை ஆட்சி தொடருமா என்பது இன்னும் சில நாட்களில்தெரியவரும்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications