மதுரை அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி: மக்கள் சாலை மறியல்
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் மருத்துவமனையில் தங்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருந்து வரும் நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார கிராம மக்கள் டெங்கு காய்ச்சலாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 6 பேர் டெங்கு காய்ச்சலுக்கு மரணமடைந்துள்ளதால் கிராம மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சொக்கம்பட்டியை சேர்ந்த சுதாகர் மகன் கார்த்திகேயன்(6), தலையூர்பட்டியை சேர்ந்த இளங்கோவன் மகன் பரத்(11), உடையாம்பட்டியை சேர்ந்த போஸ் என்பவரது மனைவி விஜயா(28), புதுசொக்கம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி பாமா(35), சென்னகரம்பட்டியை சேர்ந்த வேலு என்பவரது மகன் வேலுமணி(23) ஆகியோர் இன்று அதிகாலை மரணமடைந்தனர். பரவையை சேர்ந்த வாசுகி என்ற கல்லூரி மாணவியும் டெங்கு காய்ச்சலுக்கு இன்று உயிரிழந்தார்.
மக்கள் சாலைமறியல்
ஒரே நாளில் 6 நாளில் 6பேர் உயிரிழந்துள்ளதால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள் மருத்துவமனையில் டாக்டர்களும், நர்ஸ்களும் தங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் தங்களை அலட்சியம் செய்ததாக தெரிவித்தனர். கிராம சுகாதார நிலையங்களில் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள் இதன் காரணமாகவே பலரும் உயிரிழக்க நேரிடுகிறது என்று கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications