ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அரசு மெத்தனம்- மறு ஏலம் பற்றி சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த உரிமங்களுக்கு அண்மையில் மறு ஏலம் நடத்தப்பட்டது. ஆனால் ஏலம் மூலம் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை என்று மத்திய அரசு கூறியது. மேலும் கணக்குத் தணிக்கை அதிகாரி சொல்வது போல் ரூ1 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பெல்லாம் ஏற்படாது என்பதற்கு இதுவே சான்று என்றும் மத்திய அரசு வாதிட்டது.
இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் மறு ஏலம் தொடர்பாக உரிய விதிமுறைகளை மத்திய அரசு கடைபிடிக்கவில்லை என்று அண்மையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு மத்திய அரசின் சார்பில் துணை செயலர் ஒருவர் தாக்கல் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று விசாரணை நடைபெற்ற போது, துணை செயலர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இது போன்ற வழக்குகளில் செயலாளர் நிலையிலான ஒரு அதிகாரிதான் பதில் மனுத்தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசோ, அலட்சியமாக மெத்தனமாக செயல்படுவதைதுணை செயலர் மனுத்தாக்கல் செய்திருப்பதன் மூலம் தெரியவருகிறது என்று உச்சநீதிமன்றம் சாடியது.
அத்துடன் ரத்து செய்யப்பட்ட அனைத்து உரிமங்களையும் ஏன் மறுஏலத்துக்கு விடவில்லை என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 48 மணி நேரத்தில் இதற்கான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று தொலைத் தொடர்பு செயலருக்கு உத்தரவும் பிறப்பித்திருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications