மத்திய அரசை ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்கவிடக் கூடாது: ராம்தேவ் காட்டம்

சில்லரை வர்த்தக்ததில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்த மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி. அவருக்கு தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரத்தில் மமதாவை ஆதரிப்பதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் மமதாவை ஆதரிக்கிறேன். மக்கள் நலன் கருதும் அனைத்து கட்சிகளும் இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் போன்ற பல்வேறு ஊழல்களால் காங்கிரஸ் கட்சியின் இமேஜ் போய்விட்டது. என்னைப் பொருத்தவரை இந்த ஊழல் அரசை ஒரு நாள் கூட ஆட்சி செய்யவிடக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications