வருமானம் போதவில்லை... வாழ வழியின்றி தவிக்கும் போச்சம்பள்ளி சேலை உற்பத்தியாளர்கள்!
போச்சம்பள்ளி: ஆந்திர மாநிலம் போச்சம்பள்ளியில் சேலை உற்பத்தியாளர்களுக்கு சரியான வருமானம் கிடைக்காத காரணத்தினால் சேலை உற்பத்தியை விட்டுவிட்டு மிதியடி, பெட்சீட், டேபிள் கவர் போன்றவைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் பிரசித்தி பெற்ற போச்சம்பள்ளி சேலைகள் அழியும் நிலையை எட்டியுள்ளன.

இதன்காரணமாக போச்சம்பள்ளி சேலை உற்பத்தியைவிட்டு விட்டு பாலியெஸ்டர் சேலை உற்பத்திக்கு மாறிவிட்டனர் என்கிறார் அவர்.
ஒரு சேலை உற்பத்தி செய்ய குறைந்த பட்சம் 3 நாட்களாவது ஆகும். ஆனால் கேற்ப கூலி கிடைப்பதில்லை. மாத வருமானம் வெறும் 3,500 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. குடும்பம் மொத்தமும் உழைத்தாலும் மாத வருமானம் 8,000 ரூபாயை தாண்டுவதில்லை என்கிறார் நெசவுத் தொழிலாளி.
பாரம்பரியம் மிக்க இந்த சேலைகள் பிரசித்தி பெற்றவை. கலை நுணுக்கம் மிக்க இந்த சேலைகளை உற்பத்தி செய்யும் பணியில் 400க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் விசைத்தறிகளின் வருகையினால் தங்களால் அவற்றுடன் போட்டி போட முடியாமல் நலிவடைந்து விட்டதாக கூறுகின்றனர். கைத்தறி நெசவாளர் சங்கமும் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதில்லை என்று ஆதங்கப்படும் நெசவாளர்கள், தற்போது வருமானத்திற்காக பெட்கவர், மிதியடி, பெட்சீட் போன்றவைகளை நெசவு செய்யத்தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர். இதில் ஓரளவிற்கு வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.
போச்சம்பள்ளி சேலைகளுக்காக கோவை மற்றும் பெங்களூரு நகரங்களில் இருந்து பட்டு வாங்கி வந்து நெசவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் சீனா பட்டுக்களை வாங்கி வந்து விசைத்தறிகளில் நெய்து குறைவான விலைக்கு விற்றுவிடுகின்றனர் என்பது இவர்களின் ஆதங்கம்.
கைத்தறி நெசவில் குடும்பம் முழுவதும் உழைத்தாலும் 45 நாட்களில் வேலைப்பாடான போச்சம்பள்ளி சேலைகளை 7மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். ஆனால் பெட்சீட், பெட்கவர்களை தனியாக அதிக அளவில் உற்பத்தி செய்யமுடிகிறது என்கின்றனர் இவர்கள்.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் வருங்கால சமுதாயத்தினர் சேலை உற்பத்தி தொழிலையே மறந்து விடும் சூழல் ஏற்பட்டு விடும் என்று அஞ்சும் இந்த நெசவாளர்கள் போச்சம்பள்ளி சேலை உற்பத்தியாளர்களின் வாழ்வை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications