சென்னையில் உயிரை பறிக்கும் 'மாஞ்சா கயிறு' காற்றாடி விட்ட 21 பேர் கைது
சென்னை: சென்னையில் உயிருக்கு ஆபத்தான மாஞ்சா தடவிய கயிறு மூலம் காற்றாடி விட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த மாஞ்சா கயிறுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு எமனாக இருக்கிறது மாஞ்சா கயிறு காற்றாடி. இந்த கயிறு கழுத்தில் சிக்கி உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கையும், காயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்கதையாகிவருகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மாஞ்சா கயிறு தயாரிப்பதை குடிசைத் தொழில்போல செய்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் அவ்வப்போது போலீசார் அதிரடி சோதனை நடத்தி குவியல் குவியலாக மாஞ்சா கயிறுகளை பறிமுதல் செய்கின்றனர். இருப்பினும் மாஞ்சா கயிற்றில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
எமனாகும் மாஞ்சா கயிறு
மைதா மாவு, கடுக்காய், வஜ்ஜிரம் மற்றும் கண்ணாடி துகள்கள் ஆகியவற்றை அரைத்து கொதிக்க வைத்து, சாதாரண நூலில் மாஞ்சா என்ற மெருகை ஏற்றுகின்றனர். காய்ந்தவுடன் அது கம்பி போன்ற வலிமை பெறுகிறது. அடுத்தவர் பட்டத்தை அறுக்கவும், காற்றாடி மிக உயரத்தில் பறக்கவும் வேண்டி சிலர், அதிக அளவு கண்ணாடி துகள்களை சேர்த்து மாஞ்சா நூலை மெருகேற்றுகின்றனர். இப்படிப்பட்ட நூல்தான், வாகனங்களில் செல்பவர்களின் உடலில் பட்டவுடன் அறுத்துவிடுகிறது.
பட்டம் விடும் போட்டி
1982ஆம் ஆண்டு மாஞ்சா பட்டம் விடுவதில் ஏற்பட்ட மோதலில் வட சென்னையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
2006ஆம் ஆண்டு கோடம்பாக்கம் அஜீஸ் நகரைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் அண்ணா மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்தார்.
தொடரும் உயிரிழப்பு
2007ஆம் ஆண்டு உறவினர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 வயது குழந்தை பலியானது
2011ஆம் ஆண்டு எழும்பூரில் செரினா பானு என்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயிரிழந்தார்.
கடந்த ஜூலை மாதம் வானகரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ராஜ்குமார் என்ற வாலிபர் காற்றாடி நூல் கழுத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
வெட்டுக்காயம் உயிரிழப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாஞ்சா கயிறு அறுத்து 2 வயது குழந்தை பலியானது. கடந்த இரு தினங்களுக்கு முன் , வண்ணாரப்பேட்டையில் முதியவர் ஒருவரின் கழுத்தில் காற்றாடி நூல் சிக்கியதில் அவரது கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
வடசென்னையில் அதிகம்
வடசென்னை பகுதிகளான வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொருக்குப்பேட்டை, கண்ணதாசன்நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாஞ்சா பட்டங்களை பறக்கவிட்டு சத்தமில்லாமல் போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. எதிராளியின் பட்டத்தை மாஞ்சா கயிறு மூலம் அறுத்து எறிய வேண்டும் என்பது பேட்டியின் விதி. இதுபோன்ற நேரத்தில் அறுந்து பறந்து வரும் மாஞ்சா கயிறுதான் பொது மக்களின் உயிருக்கு எமனாக மாறுகிறது.
ஆபத்தில் சிக்கும் சிறுவர்கள்
அறுபட்டு காற்றில் பறந்து வரும் பட்டத்தை பிடிப்பதற்காக சிறுவர்கள் கண்ணை மூடிக் கொண்டு சாலைகளில் தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் சில நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை குலைந்து போகிறார்கள்.
பட்டம் விட்ட 21 பேர் கைது
வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த இரு தினங்களாக சோதனை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள், மாஞ்சா காற்றாடி விட்டுக்கொண்டிருந்த 9 பேரை கைது செய்துள்ளனர். இதேபோல் புழல் பகுதியில் மாஞ்சா நூல் காற்றாடி விட்டதாக வினோத், கண்ணன், தமிழ்செல்வன், ஆனந்தன், குமார், லட்சுமிபதி, முகமது சாகிப், காஜா, முகமதுயூசுப் ஆகியோர் உள்பட 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கடுமையான நடவடிக்கை தேவை
சென்னையில் பட்டம் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஒரு சிலரின் விபரீத விளையாட்டுக்களால் இதுபோன்ற உயரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications