For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு பலியான புது மாப்பிள்ளை: தீக்குளித்த மனைவி

By Siva
Google Oneindia Tamil News

Dengu
மதுரை: டெங்கு காய்ச்சலால் இறந்த புதுமாப்பிள்ளையின் மனைவி துக்கம் தாங்க முடியாமல் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் கடந்த 18ம் தேதி மட்டும் 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். அதில் மேலூர் அருகே உள்ளதென்னகரம்பட்டியைச் சேர்ந்த வேல்மணியும்(23) ஒருவர். அண்மையில் மஞ்சுளாகாந்தி(20) என்ற பெண்ணை மணந்த அவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.

வேல்மணி இறந்த தகவல் அறிந்த உறவினர்கள் என ஏராளமானோர் அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்தனர். அப்போது கணவனை இழந்த துயரம் தாங்க முடியாமல் இருந்த மஞ்சுளாகாந்தி திடீர் என்று எழுந்கு வீட்டுக்குள் சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். தீ எரியத் துவங்கியவுடன் அவர் அலறிக் கொண்டு வெளியே வந்தார். உடனே அங்கிருந்த உறவினர்கள் தீயை அணைத்து அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அதற்கு மஞ்சுளாவின் உறவினர்கள் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

English summary
Manjulagandhi(20), a newly married woman from Melur tried to commit suicide by immolating herself after her husband died of dengue on november 18. Her relatives rescued her and admitted her in a private hospital there for burns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X