தாய்லாந்து பிரதமர் இங்லக்கிடம் ஒபாமா ஓவர் 'கலகல'!
பாங்காக்: தாய்லாந்து சென்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அந்நாட்டு பிரதமர் இங்லக் ஷினாவத்ராவிடம் ரொம்பவே கலகலப்பாக பழகியுள்ளார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு பாரக் ஒபாமா தாய்லாந்து, மியான்மர், கம்போடியா ஆகிய 3 ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி நேற்று வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் அவர் தாய்லாந்து சென்றார். பாங்காக் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நீண்டகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதேஜை அவர் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதன் பிறகு நேற்று இரவு பாங்காக்கில் உள்ள அரசு மாளிகையில் அவருக்கு விருந்தளிக்கப்பட்டது. அந்த விருந்தில் தாய்லாந்து பிரதமர் இங்கலக் ஷினாவத்ரா, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருந்தின்போது ஒபாமா தாய்லாந்து பிரதமரிடம் கலகலப்பாக பேசி சிரித்துள்ளார். இதையடுத்து அவர் இங்லக்கிடம் வழிந்ததாக செய்திகள் வெளியாகின. மியான்மரில் ஜனநாயகத்துக்கு தாய்லாந்து அளி்த்து வரும் ஆதரவை ஒபாமா பாராட்டினார்.
முன்னதாக புத்தர் கோவிலுக்கு சென்ற ஒபாமா தனது காலணிகளை அகற்றிவிட்டு கோவிலுக்குள் சென்று அங்குள்ள நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளை கண்டு ரசித்தார். அதிலும் குறிப்பாக 150 அடி நீளம், 50 அடி உயரமுள்ள சாய்திருக்கும் புத்தர் சிலையை பார்த்து ரசித்தார். ஒபாமா கோவிலுக்கு வருவதை அறிந்த உள்ளூர்வாசிகள் வெளியே நின்று கொண்டு ஒபாமா, ஒபாமா என்று மகிழ்ச்சி கரகோஷம் எழுப்பினர்.
இன்று காலை ஒபாமா தாய்லாந்தில் இருந்து கிளம்பி பர்மா சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications