ஃபேஸ்புக்கா? ஆளை விடுங்க.... அச்சத்தில் இளம் பெண்கள்

"தாக்கரே போன்றவர்கள் தினமும் பிறக்கிறார்கள்... இறக்கிறார்கள்... அதற்காக பந்த் நடத்த வேண்டுமா?" என்று ஃபேஸ்புக்கில், எழுதிய ஷகீனும்,அதற்கு 'லைக்' போட்ட அவரது தோழி ரேணுவும் நேற்று கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் போலீசார் கைது செய்து நடத்திய விதத்தில் மிரண்டுபோய் உள்ளார் ஷகீன். அவருக்கு தொடர்ந்து மிரட்டல் வருதால் அச்சமடைந்து தனது ஃபேஸ்புக் கணக்கையும் ரத்து செய்து விட்டார் ஷகீன். தாம் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக கூறியுள்ள அவர்,நடந்த சம்பவம் தம்மை மிகுந்த அச்சத்திற்கு ஆளாக்கி இருப்பதாகவும்,இனி ஃபேஸ்புக்கில் எழுதப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் தாக்கரே குறித்து தாம் தெரிவித்த கருத்தில் குற்றம் ஏதுமில்லை என்றும், மிகச் சாதாரணமாகத்தான் தாம் அந்த கருத்தை போட்டதாகவும் மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஷகீன் தெரிவித்தார். இதேப்போன்று ஷகீன் கருத்துக்கு 'லைக்' போட்ட அவரது தோழி ரேணுவும் இதேப்போன்ற கருத்தையே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications