கள்ளத் தொடர்பு விவகாரம்: பெண்ணை கடத்திய இருவர் கைது
கமுதி: கமுதி அருகே கள்ளத் தொடர்பு விவகாரத்தில் பெண்ணை கடத்தியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாத மாவட்டம் கமுதி அருகே அமிராமம் காவல்சரகத்தை சேர்ந்த ரேவதி கருணாநிதி ஆகியோருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்ப தகராறு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குழந்தைகளை வளர்ப்பதற்காக ரேவதி விறகு வெட்டும் வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது அடிபிடிதாங்கி என்ற ஊரை சேர்ந்த ஆசிர்வாதத்தின் மகன் மாணிக்கம் என்பவருடன் ரேவதிக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி 1 மகன் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ரேவதியுடன் குடும்பம் நடத்த திட்டமிட்டு ரேவதியை வெளியூருக்கு கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மாணிக்கத்தின் மைத்துனர் பாலுவின் மகன் அழகுமலை 25 என்பவர் உதவி செய்துள்ளார்.
இந்த நிலையில் மகளை காணவில்லை என்றும், மாணிக்கம்தான் தனது மகளை கடத்தி சென்றுவிட்டார் என்றும் அபிராமம் காவல் நிலையத்தில் ரேவதியின் தந்தை ஞானபிரகாசம் புகார் செய்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரையும் தேடி வந்தார்கள். அப்போது, கமுதி - அபிராமம் சாலையில் பசும்பொன் விளக்கு சாலை அருகே ரேவதியுடன் மாணிக்கம் அழகுமலை ஆகியோர் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுப்பிடித்து இருவரையும் கைது செய்தார்கள். ரேவதி மீட்டு அவருடைய தந்தையுடன் அனுப்பிவைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications