For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக சிறைகளில் 11 பேர் தூக்கு தண்டனை கைதிகள்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சிறைகளில் மொத்தம் 11 பேர் தூக்கு தண்டனை கைதிகள் இருக்கின்றனர். இவர்களில் உச்சநீதிமன்றத்தில் 6 பேர் தண்டனை குறித்த வழக்க்கள் நிலுவையில் இருக்கின்றன. மற்றவர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரிடம் இருக்கிறது.

தமிழகத்தில் 11 பேர் மரண தண்டனை கைதிகள். தமிழகத்தில் 1995ம் ஆண்டு பல கொலைகளில் குற்றவாளியாக கருதப்பட்ட ஆட்டோ சங்கர் சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டதே தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட கடைசி மரண தண்டனை.

இதில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்றிருக்கும் நெடுஞ்செழியன், முனியப்பன், மது என்ற ரவீந்திரன் ஆகிய 6 பேர் அடங்குவார்கள்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுந்தர்ராஜ், ஜெயக்குமார், கோஒவை முஸ்கின்-ரித்திக் கொலை வழக்கில் அண்மையில் மரண தண்டனை பெற்ற மனோகர், மற்றொரு கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற செல்வம், கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செல்வம் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடக்கம்

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதேபோல தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 3 பேரின் மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எஞ்சிய சிலர் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர்.

English summary
A total of 11 people have been death sentenced prisoners in the Tamil Nadu prisons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X