தர்மபுரி ஜாதி வெறிக் கலவரத்திற்குக் காரணமான காதல் மணம் புரிந்த பெண் கோர்ட்டில் ஆஜர்
தர்மபுரி: தர்மபுரியில் ஜாதி வெறிக் கலவரம் ஏற்பட்ட மூலகாரணமாக இருந்ததாக கூறப்படும் காதல் மணம் புரிந்த பெண் திவ்யா தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தர்மபுரியை அடுத்த செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகள் திவ்யா. இவர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசனும் காதல் திருமணம் செய்ததாகக் கூறி, சேலம் டிஐஜி சஞ்சய்குமாரிடம் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து, உரிய பாதுகாப்பு வழங்குமாறு தர்மபுரி மாவட்ட காவல்துறையினருக்கு டிஐஜி உத்தரவிட்டார். இந்த நிலையில், பெண்ணின் தந்தை நாகராஜ், நவம்பர் 7ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து இரு கிராமங்களிலும் ஜாதி வெறியாட்டம் தொடங்கியது. பெரும் வன்முறை வெடித்தது. தலித் மக்கள் வாழும் நத்தம் காலணி கிராமத்திற்குள் புகுந்து வன்னிய மக்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் 3 கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சூறையாடபட்டன, குடிசைகள் தீக்கிரையக்கப்பட்டன, பொருட்கள், நகைகள் திருடப்பட்டன. மிகப் பெரும் பரபரப்பை இந்த ஜாதி வெறிக் கலவரம் ஏற்படுத்தி விட்டது.
இந்த நிலையில், பெண்ணின் தாய் தேன்மொழி, கடந்த செவ்வாய்க்கிழமை வக்கீல்களுடன் தர்மபுரி எஸ்.பியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகளை கடத்திச் சென்றிருப்பதாகவும், திருமண வயது வராத நபருக்கு திருமணம் செய்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் திவ்யா, கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஆஜரானார். அப்போது, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தானாகவே விரும்பிச் சென்றதாகவும் கூறி வாக்குமூலம் அளித்தார். ஆனால் இந்த விவகாரம் பெரும் ஜாதிக் கலவரத்திற்கு வித்திட்டு விட்டதால் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தருமாறு காவல் நிலையத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து போலீஸார் திவ்யாவை பலத்த பாதுகாப்புடன், தர்மபுரி 2வது குற்றவியல் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி முன்பு ஆஜரான திவ்யா, தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், தானே விரும்பிச் சென்றதாகவும் கூறினார். இதையடுத்து, சேலம் பெண்கள் காப்பகத்தில் திவ்யாவை வியாழக்கிழமை வைத்திருக்கவும், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கே. ஜோதி உத்தரவிட்டார்.
இதையடுத்து காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார் திவ்யா. இன்று அவரை மீண்டும் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications