கன மழை எச்சரிக்கை.. கலெக்டரே லீவு விட்டும் விடுமுறை விடாத பள்ளிகள்
சென்னை: தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சில தினங்களுக்கு முன்பு வலுவிழந்து தாழ்வுப் பகுதியாக மாறியது. இது மேலும் வலுவிழந்ததால் தமிழகத்திற்கு கன மழை வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் இந்தத் தாழ்வு நிலையானது தொடர்ந்து அங்கேயே நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் லேசான மழை பெய்துள்ளது. வானம் காலை முதலே மேகமூட்டமாக காணப்படுகிறது. சூரியனைப் பார்க்க முடியவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சித்ரசேனன் அறிவித்துள்ளார்.
இருப்பினும் மாவட்டத்தில் பல பகுதிகளில் பள்ளிகளைத் திறந்து வைத்துள்ளனர். இதனால் மாணவர்கள், பெரும் ஏமாற்றத்துடன் புலம்பியபடியே பள்ளிக்குப் போனதைப் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications