கோவையில் இந்தியாவின் மிகப் பெரிய வல்வோ ஷோரூம்!
கோவை: இந்தியாவின் மிகப்பெரிய வல்வோ கார் ஷோரூம் கோவை நகரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
உலகின் புகழ்பெற்ற வல்வோ நிறுவனத்துக்கு ஏற்கெனவே இந்தியாவில் ஏழு ஷோரூம்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மிகப் பெரியது இந்த கோவை சின்னிப்பாளையத்தில் ஷோரூம்தான்.

நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் தாமஸ் எர்ன்பர்க் கூறுகையில், "ஸ்வீடனில் தயாராகும் வல்வோ கார்கள், உலகின் அத்தனை பகுதிகளிலும் பாதுகாப்பான கார்கள் என பெயர் பெற்றுள்ளன என்றார்.
1920-ம் ஆண்டிலிருந்து சந்தையில் உள்ள வல்வோ கார்கள், இந்தியாவுக்கு 2008-ம் ஆண்டு அறிமுகமாயின.
S60, S80, XC60, XC90 என நான்கு மாடல்களில் இந்தக் கார்கள் கிடைக்கின்றன.
மிக உயரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்தக் கார்களில் செய்யப்பட்டுள்ளன. உலகின் பெரும்பாலான விபத்துக்கள் 30 கிமீக்கு குறைந்த வேகத்தில் செல்லும்போதுதான் ஏற்படுகின்றனவாம். அதாவது நகரப் பகுதிகளில்.
இதைத் தடுக்க, வல்வோ கார்களில் 50 கிமீக்கு குறைந்த வேகத்தில் செல்லும்போது, ஓட்டுநர் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை மிதித்துவிட்டால் கூட, தானாகவே வேகக் குறைப்பு செய்யும் வகையில் பிரேக் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இரும்பை விட 5 மடங்கு உறுதியான பேரன் ஸ்டீல் என்ற உலோகம் வல்வோவின் XC 90 மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரூ 33 லட்சத்திலிருந்து இந்த கார்களின் விலை தொடங்குகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications