ஆர்ட்டிஸ்ட். கார்ட்டூனிஸ்ட் என்பதால்தான் பால்தாக்கரேவுக்கு அரசு மரியாதை: மகா. முதல்வர் விளக்கம்
மும்பை: மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவுக்கு அரசியல்வாதி என்பதற்காக அரசு மரியாதை கொடுக்கவில்லை.. ஆர்ட்டிஸ்... கார்ட்டூனிஸ்ட் என்ற அடிப்படையில் அரசு மரியாதை கொடுக்கப்பட்டது என்று மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவாண் கூறியுள்ளார்.
டெஹல்கா ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பால்தாக்கரே உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர். அவர் ஒரு அரசியல்வாதி என்பதற்காக அல்ல. ஆனால் அவர் ஒரு ஆர்ட்டிஸ்ட் நல்ல கார்ட்டூனிஸ்ட். அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே பால்தாக்கரேவுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. இதே போன்ற பல கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது.
பால்தாக்கரேவின் மரணம் சிவசேனாவுக்கு பெரும் இழப்பு. சிவசேனா மற்றும் பாஜகவில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அக்கட்சிகளின் உறுப்பினர் ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவில் இணைவர். சிவசேனாவின் வாக்குகள் பிரியும்.
பால்தாக்கரே மறைவையொட்டி ஃபேஸ்புக்கில் முழு அடைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த பெண்களின் உறவினர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்காக அக்குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அனுப்பிய ஃபேக்ஸ் கிடைத்தது. அதற்கு பதிலளித்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications