திருவண்ணாமலையில் இன்று மகா தேரோட்டம்: லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று மகா தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சிவனின் பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.
திருவண்ணாமலையில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டு இருக்கும். இது தவிர ஒரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில் தமிழ் மாதமாம் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும். இத்திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத் திருவிழா ஆகும்.
இந்த பத்தாம் நாளன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்பு மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (24.11.12) மகா தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு ரதத்தில் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரேக்கை தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஆறாம் நாள் திருவிழாவில், பகலில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலாவும், தொடர்ந்து 63 நாயன்மார் சிலைகளின் ஊர்வலமும் நடைபெற்றது. இன்று 63 அடி உயரமுள்ள மகா ரத தேரோட்டம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் தேரோட்ட விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications