தலித்களுக்கு எதிராக பிற சமூகத்தைத் தூண்டி விடுகிறார்: ராமதாஸ் மீது 'ரஜினிகாந்த்' புகார்!

வழக்கறிஞர் ரஜினிகாந்த் 20 வழக்கறிஞர்களுடன் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் மீது புகார் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், "தர்மபுரியில் நடந்த வன்முறை சம்பவங்களையொட்டி கடந்த 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ராமதாஸ் அளித்த பேட்டியில் தலித் மக்கள் வாழும் பகுதிகளில் பிற சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறி உள்ளார்.
இந்த கருத்து தலித் மக்களுக்கு எதிராக பிற சமுதாயத்தை தூண்டி விடும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல மாமல்லபுரத்தில் நடந்த விழாவில் காடுவெட்டி குரு தலித்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளார். எனவே, டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அதில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications