கோவை, பாளை சிறையில் அதிரடி சோதனை; கத்தி, செல்போன்கள் பறிமுதல்!
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள், கத்திகள் கைப்பற்றப்பட்டன.
சிறையில் கஞ்சா, செல்போன் உள்ளிட்டவைகள் புழக்கத்தில் உள்ளதாக வந்த தகவலின்பேரில் இன்று இரண்டு முக்கிய சிறைச்சாலைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை சிறையில் சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில்,13 கத்திகள் மற்றும் 100 க்கும் அதிகமான செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் இன்று காலை திடீரென துணை கமிஷனர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் 6.15 மணியில் இருந்து சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் அதிரடி சோதனை நடத்த உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications