'ஜெய் தெலுங்கானா' கோஷம் ஏன் போடலை? - கொந்தளித்த டி.ஆர்.எஸ். தொண்டர்கள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெகன் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் ஜெகனின் சகோதரி ஷர்மிளாவும் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடமெல்லாம் ஷர்மிளாவுக்கும் கூட்டம் திரள்கிறது. அதிரடியாக தெலுங்கானா பிரதேசத்துக்குள்ளும் பிரவேசித்திருக்கும் ஷர்மிளாவினால் பதற்றம் உருவாகியுள்ளது.
தெலுங்கானா விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஷர்மிளாவின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர். தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு வாக்களித்தால் ஹைதராபாத்துக்கு போக பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்று சொன்னவர். அதேபோல் தெலுங்கானாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கோஷம் போட்டு பதாகை ஏந்தியவர் ஜெகன்.
இதனால் ஷர்மிளாவின் பாதயாத்திரை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மகபூப் நகரில் பாதயாத்திரை மேற்கொண்டுவரும் ஷர்மிளா, வத்தபெல்ல பிரதேசத்துக்கு சென்ற போது அவரை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் சூழ்ந்து கொண்டனர். அவரை ஜெய் தெலுங்கானா கோஷம் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஷர்மிளாவும் பொதுக்கூட்ட முடிவில் அபடியே கோஷம் போடுவதாகக் கூறினார். ஆனால் அப்படி ஏதும் கோஷம் போடாததால் கடுப்பாகிப் போன தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் ஷர்மிளாவை சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்ப அந்த இடமே களேபரமாகிப் போனது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரை ஒய்.எஸ்.ஆர். தொண்டர்கள் நையப் புடைத்துவிட்டனர். பினன்ர் போலீசார் அங்கு வந்து தெலுங்கா ராஷ்டிரிய சமிதி கட்சியினரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications