மழைக்கால தொடரைப் போல பார்லி.யை நடத்த முடியாத மத்திய அரசு!

குளிர்கால கூட்டத் தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. தொடங்கிய முதல் இரண்டு நாட்களுமே அன்னிய முதலீடு விவகாரத்தினால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று காலை மக்களவையும் மாநிலங்களவையும் கூடிய போது சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. எதிர்க்கட்சிகளின் முழக்கங்களால் இரு அவைகளிலும் கடுமையான அமளி நிலவியது. இதனால் இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் 12 மணிக்கு இரு அவைகளும் கூடின. மக்களவையும் மாநிலங்களவையும் மீண்டும் சில நிமிடங்களிலேயே நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
மழைக்கால கூட்டத் தொடர்
கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இதேபோல் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவையும் மாநிலங்களவையும் சுமார் ஒரு மாத காலம் முடக்கி வைக்கப்பட்டது. மத்திய அரசால் நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் அமளிகளுக்கு இடையே சில மசோதாக்களை நிறைவேற்றிவிட்டு நாள்தோறும் அவையை ஒத்திவைப்பதையே வழக்கமாக வைத்திருந்தது. அதே போன்ற ஒரு நிலைதான் தற்போதும் உருவாகி இருக்கிறது.
மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த கடந்த முறை போலவே இம்முறையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது மத்திய அரசு. ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் மீண்டும் நாடாளுமன்றம் முடங்கும் நிலையே இருக்கிறது.
இப்படியே இந்தக் கூட்டத் தொடரையும் இழுத்தடித்துவிடலாம் என மத்திய அரசு கருதுவது என்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications