மூத்த பாகிஸ்தான் டிவி நிருபரைக் கொல்ல வெடிகுண்டு வைத்த தலிபான்கள்!

அல் கொய்தா தலைவரான ஒசாமா பின் லேடனை பேட்டி கண்ட மிகச் சில பத்திரிக்கையாளர்களில் இவரும் ஒருவராவார்.
பாகிஸ்தானின் ஜியோ டிவியில் பணியாற்றி வரும் இவர் இன்று காலை இஸ்லாமாபாத்தில் ஒரு மார்க்கெடுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது அவரது காருக்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதை அவரது டிரைவர் பார்த்துவிட்டு உடனடியாக போலீசாருக்குத் தகவல் தந்தார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த குண்டை செயல் இழக்கச் செய்ததால் மீர் உயிர் தப்பியுள்ளார்.
தலிபான்களின் கொடூரங்களுக்கு எதிராகப் பேசிய மலாலா யூசிஸாய் என்ற பெண்ணுக்கு ஆதரவாக ஜியோ டிவியில் மீர் கருத்துத் தெரிவித்து வந்ததால் இவரைக் கொல்ல தலிபான்கள் முயன்றதாகத் தெரிகிறது.
ஆனால், இந்த வெடிகுண்டு சம்பவத்துக்குப் பின் ஜியோ டிவியில் பேசிய மீர், உண்மையைப் பேசக் கூடாது என்ற நோக்கத்தில் என்னைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. ஆனால், இதுபோன்ற செயல்களால் என்னை ஒடுக்கிவிட முடியாது என்று தலிபான்களுக்கு சவால் விட்டார்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் முயற்சிக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications