கசாப் மரணத்திற்கு பழி: வைஷ்ணோ தேவி கோவிலை தகர்க்கப் போவதாக லஷ்கர் இ தொய்பா மிரட்டல்

மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கில் போடப்ட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபின் மரணத்திற்கு பழிவாங்க லஷ்கர் இ தொய்பா அமைப்பு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்ராவில் உள்ள தேவி கிராண்ட் ஹோட்டல் அதிபர் ஏ.ஹெச். பட்டிற்கு லஷக்ர் இ தொய்பா அமைப்பினர் இ மெயில் அனுப்பியுள்ளனர். அதில், கசாப் மரணத்திற்கு பழிவாங்க ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலை தகர்க்கப் போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மிரட்டல் இமெயில் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கோவில் அமைந்துள்ள இடத்திற்கு டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். மேலும் அங்கு கூடுதல் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர அப்பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுவதுடன் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த இ மெயிலை ஏதாவது தேச விரோதிகள் கூட அனுப்பியிருக்கலாம். ஆனாலும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications