ஜெ. குறித்து டிவியில் பேட்டி: ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு பாய்ந்தது
சென்னை: தமிழக அரசுக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறியதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கி கிடப்பதற்கு மாநில அரசு காரணம் என்றும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அரசு திட்டப்பணிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம் தமிழ்நாட்டில் ஆளும் அரசியல் கட்சி தலைவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அதிகப்படியான கமிஷன் தொகை கேட்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவரது பேச்சானது உண்மைக்கு மாறானது. அடிப்படை ஆதாரமற்றது. வேண்டுமென்று உள்நோக்கத்துடன் அவதூறாக பேட்டி அளித்துள்ளார். இது, முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே அவதூறு பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications