ஹய்யா..வந்துருச்சு காற்றழுத்தத் தாழ்வு நிலை.. மறுபடியும் மழை பெய்யலாமாம்!
சென்னை: வங்கக் கடலில், அதுவும் தமிழகத்திற்கு அருகில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளதாம். இது அப்படியே நிலை கொண்டு, தாழ்வு நிலையாக மாறினால் தமிழகத்தில் அடுத்த வாரத்தில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை இந்த பெரிய அளவில் சிறப்பாக இல்லை. இடையில் நிலம் புயல் வந்து சென்ற போதிலும் கூட தமிழகம் முழுவதும் அதனால் பலன் பெறவில்லை. போதிய அளவு மழை இல்லாத நிலைதான்.
தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் குளிரும், பனியுமாக உள்ளது. இதனால் மழை வருமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் மனதில் குளிர்ச்சியைக் கொண்டு வரும் வகையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு அருகே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், இது அங்கேயே நிலை கொண்டு தாழ்வு நிலையாக மாறினால் அடுத்த வாரத்திலிருந்து தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 3ம் தேதிக்குப் பிறகு மழை பெய்யலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
லேட்டானாலும் பரவாயில்லை,மக்கள் மனம் குளிர, மண்ணெல்லாம் நன்றாக நனையும் அளவுக்கு நல்ல மழை வந்தால் போதும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications