பாஜகவுடன் கூட்டணி வைத்து வென்றதை கருணாநிதி மறக்கலாமா?: பொன்.ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

Pon Radhakrishnan
சென்னை: 1999ம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட திமுக, அன்று ஏறிய ஏணியை இன்று எட்டி உதைப்பது கருணாநிதியின் தகுதிக்கு சற்றும் உகந்ததல்ல என்று தமிழ்நாடு பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அன்னிய முதலீடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு சஸ்பென்ஸ் வைத்த திமுக தலைவர் கருணாநிதியை, அப்போதே அவர் இரட்டை வேடம் போடுகிறார் என அரசியல் நோக்கர்கள் கூறினர்.

தற்போது, மத்திய அரசு கவிழாமல் இருக்க அன்னிய நேரடி முதலீடு தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் தனது இரட்டை நிலைப்பாட்டை அவர் உறுதி செய்துள்ளார்.

மேலும், மக்களவைக்கு இப்போது தேர்தல் நடந்தால் பாஜக தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும், அவருக்கு தேர்தல் மீதான பயத்தையும் அவரது செயல்பாடு காட்டுகிறது.

1999ம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட திமுக, அன்று ஏறிய ஏணியை இன்று எட்டி உதைக்க நினைப்பது அவருடைய தகுதிக்கு சற்றும் உகந்ததல்ல என்று கருதுகிறோம்.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு முதலில் ஆதரவு மறுத்ததற்கும், பிறகு ஆதரவு தெரிவிப்பதற்குமான உண்மையான காரணத்தை திரை மறைவை அகற்றி தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+