அடக்கடவுளே பொம்பள புள்ளைக்கு இப்படியும் பெயர் வைப்பாங்களா?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பெண் ஒருவர் தனது பெண் குழந்தைக்கு ட்விட்டரில் உள்ள வசதியான ஹாஷ்டேகையே பெயராக வைத்துள்ளார்.

இன்றைய உலகில் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களை பயன்படு்ததுகின்றனர். அதிலும் சிலர் நடப்பது, சாப்பிடுவது, உட்காருவது, தூங்குவது என்று தாங்கள் என்ன செய்தாலும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களால் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இல்லாமல் இருக்க முடியவில்லை.

அப்படி ட்விட்டரை பயன்படுத்தும் பெண் ஒருவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு ட்விட்டரில் உள்ள வசதியான ஹாஷ்டேகையே பெயராக வைத்துள்ளார். இதில் விந்தை என்னவென்றால் ஹாஷ்டேக் என்று மகளுக்கு பெயர் வைத்துவிட்டு அதை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் அந்த பெண் கூறியிருப்பதாவது, ஹாஷ்டேக் ஜேம்ஸ்சன் நேற்று இரவு 10 மணிக்கு பிறந்தாள். அவளின் எடை 8 பவுண்ட். அவளை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு இஸ்ரேலைச் சேர்ந்த தம்பதி தங்கள் மகளுக்கு ஃபேஸ்புக்கில் உள்ள லைக் பட்டனையடுத்து லைக் என்று பெயர் வைத்தனர். இது தவிர எகிப்தைச் சேர்ந்த கமால் இப்ராகிம் தனது மகளுக்கு ஃபேஸ்புக் என்றே பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+