கிணற்றுக்குள் சிக்கிய விலங்குகள்..: எம்.பிக்களை விமர்சித்த மணிசங்கருக்கு எதிராக பார்லி.யில் நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்றத்தில் கூச்சலிடும் எம்.பிக்களை விலங்குகளுடன் ஒப்பிட்டுக் கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் கட்சி எம்.பி. மணிசங்கர் அய்யர் மீது மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது.
அய்யரின் விமர்சனம்
நாடாளுமன்றம் முடக்கப்படுவது தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மணிசங்கர் அய்யர், "கிணற்றுக்குள் சிக்கி கூப்பாடு போடுகிற விலங்குகளை"ப் போல எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று கூறியிருந்தார். இந்த விவாதம் நேற்று மாநிலங்களவையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சுக்லா குறுக்கிட்டு, மணிசங்கர் அய்யருக்காக தாம் மன்னிப்பு கேட்பதாகக் கூறினார் அவரும் மன்னிப்பு கோருவார் என்றார்.
உரிமை மீறல் நோட்டீஸ்
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களோ, "மணிசங்கர் சபையில் ஆஜராக வேண்டும்" என்று வலியுறுத்தினர். அப்போது மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன், இது குறித்து நோட்டீஸ் தரும்படி உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மணி சங்கர் அய்யர் மீது மாநிலங்களவை நடத்தை விதிகளின் கீழ், பாரதிய ஜனதா கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த ஜகத் பிரகாஷ், தர்மேந்திர பிரதான், புபேந்திர யாதவ் ஆகியோர் இணைந்து இதற்கான நோட்டீசை மாநிலங்களவை முதன்மைச் செயலாளரிடம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications