கருத்துரிமைக்கான கட்ஜூவின் கடிதம்- நாய்கள் குரைக்கவே செய்யும் : மமதா பதிலால் சர்ச்சை

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்தவதற்கு கைது செய்வது, கேள்வி எழுப்பினாலே மாவோயிஸ்ட் என முத்திரை குத்துவது போன்ற மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் நடவடிக்கைகளை கடிதம் ஒன்றில் மார்க்கண்டேய கட்ஜூ விமர்சித்திருந்தார். மேலும் மமதா அரசின் அமைச்சர்கள் எவருமே சுதந்திரமாக கருத்து தெரிவிக்க அச்சப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார் கட்ஜூ. இப்படியான நடவடிக்கை தொடர்ந்தால் நீங்கள் முதல்வராக தொடரவும் முடியாது என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
கட்ஜூவின் இந்த கடிதம் குறித்து மமதா பானர்ஜி நேரடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த தகவல் வெளியானபோது அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மமதா பானர்ஜி, " சிலர் அரசை அவதூறாகப் பேசுவதற்கு எழுந்துள்ளனர். அரசுக்கு எதிராக எதிர்மறைப் பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். மன்னன் சந்தைக்கு போனால் நாய்கள் குரைக்கத்தான் செய்யும். அவைகளை குரைக்க விடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
மார்க்கண்டேய கட்ஜூவின் விமர்சனத்துக்கு பதில் அளிப்பதுபோல மமதா பானர்ஜி கருத்து தெரிவித்திருப்பதாகவே இது கருதப்படுகிறது. மமதாவின் இந்த வார்த்தைகள் கடுமையான சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications