காவிரி நீர் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

காவிரி நதிநீர் வழக்கில் தமிழக- கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிகே.ஜெயின், மதன் பி லோகுர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று காவிரி நதி நீர் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பெங்களூர் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது பற்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்துக்கு 39 டி.எம்.சி நீர் தேவைபப்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகமோ தங்களுக்கு 78 டி.எம்.சி. நீர் தேவை என்று வாதிட்டது.
இதைத் தொடர்ந்து இரு மாநில அரசுகளும் தங்களுக்கான தண்ணீர் தேவை குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சம்பா பயிரைக் காப்பாற்ற இன்று முதல் 15-ந் தேதிவரை நாள்தோறும் 2 டி.எம்.சி. வீதம் தமிழகத்துக்கு 30 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசின் சார்பிலும் இதேபோல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications