இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 'டெங்கு' பலி அதிகம்: பார்லி.யில் குலாம்நபி ஆசாத் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு மொத்தம் 216 பேர் பலியாகி உள்ளனர். இதில் தமிழகத்தில்தான் அதிகளவாக 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த குலாம்நபி ஆசாத், நாடு முழுவதும் 216 பேர் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 60, மகாராஷ்டிராவில் 59, கர்நாடகத்தில் 21, பஞ்சாப்பில் 15, கேரளாவில் 13, மேற்கு வங்கத்தில் 9, ஒடிஷா, மத்திய பிரதேசத்தில் 6, டெல்லியில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
சிக்குன்குனியா காய்ச்சல் பொதுவாக இந்த ஆண்டு குறைந்தே இருக்கிறது. 14,227 பேர் சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications