அந்தமான் அருகே புதிய தாழ்வு நிலை... இந்த முறையாவது போதிய மழை கிடைக்குமா?

வடகிழக்கு பருவமழை ஆரம்பமான அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை போதிய மழை பெய்ய வில்லை. வழக்கமாக நவம்பர் மாதத்தில் அதிக அளவு மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு அதுவும் பொய்த்துவிட்டது.
கடந்த மாதம் வங்க கடலில் உருவான நீலம் புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தபோதிலும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. 'வெறும் காத்துதான்' வந்தது!
இந்த நிலையில் வங்க கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு புதிதாக உருவாகி இருப்பது தமிழ் நாட்டுக்கு அதிக மழையை தரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
சென்னைக்கு 1000 கி மீ தூரத்தில்...
இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு 1000 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை முதல் மழையை எதிர்பார்க்கலாம். 3 நாட்கள் பலத்த மழை பெய்யும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications