வெள்ளதுரையின் என்கவுன்ட்டர்- வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள்

Subscribe to Oneindia Tamil

SI Alvin Suthan murder case
மானாமதுரை: திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபு மற்றும் பாரதி இருவரும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காவல்துறை டிஐஜியோ 'சிறுநீர் கழிக்க செல்வதாகக் கூறிவிட்டு தப்பினர்' என்று கூறியுள்ளார். ஆனால் நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனை செல்லும்போது 'போலீசாரை' தாக்கிவிட்டே தப்பி ஓடியதாக கூறப்படுகிறது எது உண்மை என்று என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அக்டோபர் 27-ந் தேதி திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் ரவுடி கும்பல் ஒன்றினால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மானாமதுரை புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி உட்பட 15 பேர் போலீசாரால் கைது செய்தனர். அதே நேரத்தில் பிரபு உட்பட 3 பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் மற்ற என்கவுன்ட்டர்கள் போலவே இந்த சம்பவமும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

வெள்ளதுரை இருந்தாரா? வந்தாரா?

ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில்,

1. கைதிகள் பிரபுவும் பாரதியும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பினரா? டிஐஜி ராம. சுப்பிரமணியன் கூறுவது போல், சிறுநீர் கழிப்பதாகக் கூறி தப்பினரா?

2. எஸ்.ஐ. பூமிநாதன் உள்ளிட்ட மூன்று போலீசாரை பிரபுவும் பாரதியும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்த போது வெள்ளதுரை அங்கு இருந்தாரா? அல்லது சம்பவம் நடந்த இடத்துக்கு வெள்ளதுரை விரைந்து வரும் வரை 'மோதல் நீடித்ததா? அல்லது போலீசார் படுகாயமடைந்த நிலையில் வெள்ளதுரை வரும் வரை 'பிரபும் பாரதியும்' அங்கேயே காத்திருந்தனரா? இது ஒருபுறம் இருக்க

அல்லது இருவரும். சொந்த ஊரில்தான் பதுங்கப் போகிறார்கள் என்பதால் "அப்பகுதியில் சோதனை நடத்தினோம்.அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன்" என்று வெள்ளத்துரை சொல்வது சரியா?

3. மாலையில் இருவரும் தப்பியதாகவும் 3.40 மணியளவில் மதுரை போலீசில் தப்பியதாக போலீசாரே புகார் கூறியுள்ள நிலையில் 3 மணி நேரம் வரை அவர்கள் மதுரை- மானாமதுரை சாலையில்தான் பயணித்துக் கொண்டிருந்தார்களா? தப்பிச் சென்ற அவர்கள் தலைமறைவாகாமல் ஆயுதங்களை திரட்டுவதிலேயே குறியாக இருந்து 'பெட்ரோல் குண்டுகள்' அரிவாளை சேகரித்துக் கொண்டு அதுவும் பிரதான சாலையிலேயே போய்க் கொண்டிருந்தனரா?

4. திருப்பூர் நீதிமன்றத்தில் பிரபு சரணடைந்த போதே. "எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்களை அழைத்து செல்லும் வழியில் என்கவுன்டரில் போலீசார் கொலை செய்து விடுவார்கள்" என்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் என்ன மாதிரியான பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது? அவர்கள் அச்சப்பட்ட படியே என்கவுன்டர் நடந்துள்ளதே? நீதித்துறை சொல்லப் போகும் பதில் என்ன?
என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

கசாப்புக்கே 4 வருஷம்

பிரபுவின் உறவினரான செல்வம் என்பவர் கூறுகையில், எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலைக்கும் டிப்ளமோ இன்ஜியரான பிரபுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவன் பாரதியின் நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக போலீசார் தேடியது. இதனால் அவனாகவே திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். நீதிமன்றத்தில் சரணடைந்த ஒருவன் எப்படி தப்பி ஓட முயற்சிப்பான்? 170 பேரை படுகொலை செய்த அஜ்மல் கசாப்பையே 4 ஆண்டுகால நீதிமன்ற விசாரணைக்கு பிறகுதானே தூக்கில் போட்டாங்க...? ஆனால் போலீஸ் கஸ்டடியில் இருந்தவங்களை தப்பி ஓடுனாங்க.. அரிவாளால் வெட்டுனாங்க... பெட்ரோல் குண்டு வீசினாங்க .. என்று சொல்வதெல்லாம் நம்பக் கூடியது அல்ல.. இது கடும் கண்டனத்துக்குரியது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+