ஹபீத் சையத்துக்கு எதிராக ஆதாரம் கொடுங்க.. நடவடிக்கை எடுக்கிறோம்: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையான லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சையத்துக்கு எதிராக போதுமான ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஹபீஸ் சையத் தற்போது கஸ்டடியில் இருக்கிறார். இப்பொழுதாவது இந்தியா அவருக்கு எதிரான ஆதாரங்களைக் கொடுத்தால் நீதிமன்றத்தில் அவற்றை நாங்கள் தாக்கல் செய்வோம் என்றார்.
தற்போது இந்தியா கொடுத்திருக்கும் ஆதாரங்கள் போதுமானது அல்ல..இந்தியா ஆதாரம் கொடுக்காவிட்டால் அவர் விடுவிக்கப்பட வேண்டிய நிலைதான் வரும் என்றார்.
லஷ்கர் இ தொய்பாவின் முன்னணி அமைப்பா ஜமாத் உத் தவாவுக்கு மும்பை தாக்குதலில் தொடர்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு சபை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக ஹபீஸ் சையத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications