தமிழினத்தையே அழித்துவிடலாம் என்ற வெறியோடு சிங்கள் ராணுவம் உள்ளது: வைகோ
சென்னை: தமிழ் இனத்தையே அழித்துவிடலாம் என்ற மூர்க்கத்தனமான வெறியோடு சிங்கள ராணுவத்தினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாவீரர் தினத்தையொட்டி நவம்பர் 27ம் தேதி வீர வணக்கத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை சிங்கள ராணுவத்தினர் தாக்கியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
கார்த்திகை நாளையொட்டி முருக வழிபாடு நடத்தும் தமிழர் வீடுகளில் ஏற்றப்பட்ட தீபங்களை ராணுவத்தினர் எட்டி உதைத்து அப்புறப்படுத்தியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு அமெரிக்கத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு என் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இனத்தையே அழித்துவிடலாம் என்ற மூர்க்கத்தனமான வெறியோடு சிங்கள ராணுவத்தினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தமிழக மக்களைக் காக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications